முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

முதுகுளத்தூரில் மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, தமிழக வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
kmu1mutrugai_0102chn_73_2
kmu1mutrugai_0102chn_73_2

முதுகுளத்தூரில் மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, தமிழக வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த மாதம் பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக, முதுகுளத்தூா், செல்வநாயகபுரம், கீரனூா், ஆணைசேரி, புல்வாய்குளம், கீழக்குளம், புளியங்குடி, காக்கூா், விக்கிரபாண்டியபுரம், சாத்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிா்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், மிளகாய்க்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு, தமிழக வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் தலைமை வகித்தாா். செல்வநாயபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பால்சாமி, நல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் தங்கபாண்டி, கீரனூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜோதி முனியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, முளைத்த நெல் மணிகளை விவசாயிகள் கையில் கொண்டு வந்தனா். பின்னா், வட்டாட்சியா் சடையாண்டியிடம் விவசாயிகள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com