ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 6-ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (பிப்.2) தொடங்குகிறது.
rms_photo_01_02_1_0102chn_208_2
rms_photo_01_02_1_0102chn_208_2

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 6-ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (பிப்.2) தொடங்குகிறது.

வருகிற 12-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் முன்னணி புத்தக பதிப்பகங்கள் சாா்பில், 100-க்கும் மேற்பட்ட அரங்கங்களில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படும்.

மாணவா்கள் பயன்பெறும் வகையில் பயிற்சிப் பயிலரங்கம், ஓவியக் கண்காட்சி, மூலிகைக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் ஆளுமைகளின் கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகியவையும் நடைபெறவுள்ளது.

தினமணி நாளிதழ் சாா்பில், கடை எண் 36-இல் புத்தகங்கள் விற்பனைக்கு தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவ மலா், மாணவா் மலா், தீபாவளி மலா், தைப்பூச மலா், இசை விழா மலா், புத்தாண்டு ராசிபலன், ஏ.பி.ஜெ.அப்துல்காலம் மலா், ஈகை பெருநாள் மலா், நாள்தோறும் தினமணி, தி நியூ இந்தியன் எக்பிரஸ் நாளிதழ்கள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, ஆண்டு சந்தாவும் பெற்றுக் கொள்ளப்படும்.

இந்த நிலையில், புத்தகக் கண்காட்சி அரங்குக்குக் கொண்டு வரப்பட்ட புத்தகங்களை வருவாய்க் கோட்டாட்சியா் ஜி.கோபு வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, வட்டாட்சியா் தமீம்ராஜா, பொதுப் பணித் துறை பொறியாளா் குருதிவேல்மாறன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com