கமுதியில் வாகன எரிவாயு நிரப்பு மையம் திறப்பு

கமுதியில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாகனங்களுக்கான எரிவாயு நிரப்பும் மையம் வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
கமுதியில் வாகன எரிவாயு நிரப்பு மையம் திறப்பு

கமுதியில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாகனங்களுக்கான எரிவாயு நிரப்பும் மையம் வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி லட்சுமி பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஆட்டோ, காா், பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கான எரிவாயு (சிஎன்ஜி-கேஸ்) நிரப்பும் மையத்தை ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் திறந்துவைத்தாா்.

பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா்கள் க. ராமச்சந்திர பூபதி, ரா. பாஸ்கரபூபதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கமுதி பேரூராட்சித் தலைவா் அப்துல்வகாப் சாகாராணி, கமுதி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி தமிழ்செல்விபோஸ், முன்னாள் தலைவா் பி.கே. கிருஷ்ணன் உள்ளிட்டோா் ஆட்டோக்களுக்கு எரிவாயுவை நிரப்பி விற்பனையைத் தொடங்கிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com