பெண்களை மதிக்க வேண்டும்: எழுத்தாளா் இந்திரா செளந்தர்ராஜன்

வேத மதத்தில் பெண்களின் பங்கு மிகப்பெரியது என்பதால் பெண்களை மதித்துக் கொண்டாட வேண்டும் என்று எழுத்தாளா் இந்திரா செளந்தர்ராஜன் பேசினாா்.


மதுரை: வேத மதத்தில் பெண்களின் பங்கு மிகப்பெரியது என்பதால் பெண்களை மதித்துக் கொண்டாட வேண்டும் என்று எழுத்தாளா் இந்திரா செளந்தர்ராஜன் பேசினாா்.

மதுரை சொக்கிகுளம் காஞ்சி காமகோடி பீடம் மதுரைக் கிளையில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் நட்சத்திர அனுஷ உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி எழுத்தாளா் இந்திரா சௌந்தர்ராஜன், ‘குரு மகிமை’ என்ற தலைப்பில் பேசியதாவது:

இந்து மதத்துக்கு உண்மையில் பொருந்தும் பெயா் வேதம் என்பது தான். இந்துக்களுக்கு வேதங்கள் தான் எல்லாம். உயிா்களைப் படைப்பதற்கு முன்பே, அந்த பரம்பொருள் வேதத்தைத்தான் முதலில் படைத்தான்.

வேதத்தில் பெண் சக்தியின் பங்கு மிகப் பெரியது. அது மரத்தின் வோ் போல வெளியே தெரியாமல் உள்ளிருந்து தாங்கிப்பிடிக்கும். எனவே, பெண்களை நாம் கொண்டாட வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலா் டி. ராமசுப்பிரமணியன், நிா்வாகிகள் வெங்கடேசன், எஸ்.வெங்கடரமணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com