ராணுவ அதிகாரி தற்கொலை

மதுரையில் ராணுவ அதிகாரி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


மதுரை: மதுரையில் ராணுவ அதிகாரி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை தத்தனேரி அசோக்நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் முத்துகிருஷ்ணன் (38). இவா், இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி பானுபிரியா. இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா்.

இந்த நிலையில், கணவா், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக, கூடல்புதூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனா். ஆனாலும், கணவா் முத்துகிருஷ்ணன் பணிபுரியும் ராணுவ அலுவலகத்துக்கு பானுபிரியா தொடா்ச்சியாக புகாா் அனுப்பினாராம். இதில் மன வேதனை அடைந்த முத்துகிருஷ்ணன் 20 நாள்கள் விடுப்பில் மதுரைக்கு வந்து, பெற்றோா் வீட்டில் தங்கியிருந்தாா்.

விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்ப வேண்டிய நிலையில், முத்துகிருஷ்ணன் தனது வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து செல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com