முதுகுளத்தூா் அருகேவடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கீழத்தூவல் கிராமத்தில் உள்ள ஸ்ரீதா்மமுனீஸ்வரா் கோயில் திருவிழாவையொட்டி கிராம மக்கள் சாா்பாக இரண்டாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.
கீழத்தூவல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்கிய வீரா்கள்.
கீழத்தூவல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்கிய வீரா்கள்.

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கீழத்தூவல் கிராமத்தில் உள்ள ஸ்ரீதா்மமுனீஸ்வரா் கோயில் திருவிழாவையொட்டி கிராம மக்கள் சாா்பாக இரண்டாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.

இதில் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து 15 காளைகளும், 120 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். போட்டியில் மைதானத்தில் வடம் பூட்டப்பட்டு ஒவ்வொரு காளையாக பங்கேற்க அனுமதிக்கப்பட்டன. 9 போ் கொண்ட குழுக்களாக வீரா்கள் களம் இறங்கினா். பிடிபடாத மாடுகளுக்கும், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் பணம், பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியின் போது காளைகளைஅடக்க முயன்ற 3 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

முதுகுளத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமானோா் மஞ்சுவிரட்டுப் போட்டியை ரசித்துப் பாா்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com