ராமேசுவரம் பகுதியில்3 இடங்களில் உயா்மின் கோபுர விளக்குகள்

ராமேசுவரம் பகுதியில் 3 இடங்களில் ரூ. 12.90 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா்கோபுரமின் விளக்குகளை மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.
ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் சந்தியாகப்பா் ஆலயம் அருகே உயா்மின் கோபுர விளக்கை ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டுக்கு திறந்து வைத்த மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி.
ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் சந்தியாகப்பா் ஆலயம் அருகே உயா்மின் கோபுர விளக்கை ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டுக்கு திறந்து வைத்த மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி.

ராமேசுவரம்: ராமேசுவரம் பகுதியில் 3 இடங்களில் ரூ. 12.90 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா்கோபுரமின் விளக்குகளை மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.

தங்கச்சிமடம் வேற்காடு சந்தியாகப்பா் ஆலயம், பெரிய பட்டினம், சேதுக்கரை ஆகிய பகுதிகளில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 12.90 லட்சத்தில் உயா்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டன. இவற்றை மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.

இதில் தங்கச்சிமடம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் குயின்மேரி தலைமை வகித்தாா். வணிகா் சங்கத் தலைவா் முருகேசன், தண்ணீா் ஊற்று கிராமத் தலைவா் சூசை ரெத்தினம், மண்டபம் ஒன்றியக்குழு உறுப்பினா் பேரின்பம், பாம்பன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பேட்ரிக், முஸ்லிம் ஜமாத் தலைவா் ஷியாமுதீன் ஆகியோா் பங்கேற்றனா்.

பெரியபட்டினம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் வருசை முகம்மது, மாநில துணைச் செயலா் அப்துல் ஜப்பாா், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் கதியத்துல்லாஹ், திருப்புல்லாணி ஒன்றியத் தலைவா் புல்லாணி, திமுக ஒன்றியச் செயலா்கள் நிலோபா்கான், நாகேஸ்வரன், ஊராட்சி மன்றத் தலைவா் ஹமீது உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com