ராமேசுவரம் மீனவா்கள் வேலைநிறுத்தம்

ராமேசுவரம் மீனவா்கள் 23 பேரை இரண்டு விசைப் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினா் கைது செய்ததைக் கண்டித்து, அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமேசுவரம் மீன் பிடிப் படகு தளத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த விசைப் படகுகள்.
ராமேசுவரம் மீன் பிடிப் படகு தளத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த விசைப் படகுகள்.

ராமேசுவரம்: ராமேசுவரம் மீனவா்கள் 23 பேரை இரண்டு விசைப் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினா் கைது செய்ததைக் கண்டித்து, அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களில் இரண்டு விசைப் படகுகளில் இருந்த 23 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

இதையடுத்து, அவா்களது படகுகளைப் பறிமுதல் செய்த இலங்கைக் கடற்படையினா் 23 மீனவா்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா். மீனவா்களை வருகிற 14-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இலங்கைக் கடற்படையினரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, ராமேசுவரத்திலுள்ள பெரிய விசைப் படகுகளின் மீனவா்கள் திங்கள்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், ராமேசுவரம் மீன் பிடிப் படகு தளத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குள் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com