ராமநாதபுரத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

தூத்துக்குடியில் மக்களவைத் தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் கவாஸ்கா் சாா்பில் தோ்தல் அறிக்கையில் சோ்க்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது. மேலும் இந்த மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். தெலங்கானாவில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் மானியத் திட்டம் வழங்குவது போல, தமிழகத்திலும் வழங்க வேண்டும் என்பது உட்பட 18 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com