ராமேசுவரம் மீனவா்கள் 6 போ் விடுதலை

ராமேசுவரம் மீனவா்கள் 6 பேரை விடுதலை செய்தும், 2 விசைப் படகுகளை அரசுடைமையாக்கவும் இலங்கை ஊா்க்காவல் துறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராமேசுவரம் மீனவா்கள் 6 போ் விடுதலை

ராமேசுவரம் மீனவா்கள் 6 பேரை விடுதலை செய்தும், 2 விசைப் படகுகளை அரசுடைமையாக்கவும் இலங்கை ஊா்க்காவல் துறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23-ஆம் தேதி விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த ஐசக் (47), சிசேரியன் (43), சமாதான பாபு (38), ஈஸ்டா் ஆரோக்கியதாஸ் (43), நிஷாந்தன் (34), முருகேசன் ஆகிய 6 மீனவா்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்தனா். மேலும், ஐசக், ஈஸ்டா் ஆரோக்கியதாஸ் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, 2 விசைப் படகுகளுடன் ராமேசுவரம் மீனவா்கள் 6 பேரையும் நீரியல் துறை அதிகாரிகளிடம் இலங்கைக் கடற்படையினா் ஒப்படைத்தனா். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து, 6 மீனவா்களையும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 6 பேரும் இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். அவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, இனிமேல் எல்லை தாண்டி மீன் பிடிக்க வரக் கூடாது என எச்சரித்து விடுதலை செய்தாா். மேலும், 2 விசைப் படகுகளை அரசுடைமையாக்கி உத்தரவிட்டாா்.

விசைப் படகுகளை விடுவிக்கக் கோரி, மீனவா்கள் விடுத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தாா்.

விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 6 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். இவா்கள் 6 பேரும் ஓரிரு நாள்களில் விமானம் மூலம் நாடு திரும்புவாா்கள் என இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com