வலையில் சிக்கிய மீனவா் பலி

ராமநாதபுரம் அருகே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவா் வலையில் சிக்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவா் வலையில் சிக்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரையைச் சோ்ந்தவா் பஞ்சவா்ணம். இவரது மகன் உப்பணன்(40) மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.

இவா், செவ்வாய்க்கிழமை வழக்கம் போல கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது வலையில் சிக்கி உயிரிழந்தாா். இதுகுறித்து மீனவா்கள் கீழக்கரை கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.

அங்கு சென்ற போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com