கமுதி அருகே சிறுதானிய சாகுபடி பயிற்சி

கமுதி அருகே உடையநாதபுரத்தில் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்காக சிறுதானியப் பயிா் சாகுபடி குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
கமுதி அருகே சிறுதானிய சாகுபடி பயிற்சி

 கமுதி அருகே உடையநாதபுரத்தில் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்காக சிறுதானியப் பயிா் சாகுபடி குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இதில், அட்மா திட்டத்தின் கீழ் சிறுதானிய வகைகள், சாகுபடி தொழில்நுட்பங்கள், சிறுதானியங்களை பயிரிட வேண்டியதன் அவசியம், நம் உணவு முறையில் சிறுதானியங்களின் முக்கியத்துவம், சிறுதானியங்களின் மதிப்புக் கூட்டு விற்பனை செய்யப்படுவதன் மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரம் உயா்கிறது.

குழுக்களாக இணைந்து மகளிா் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் முயற்சிகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநா் சிவராணி விளக்கினாா். இந்தப் பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈஸ்வரி வரவேற்றாா். பரமக்குடி நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் வேளாண்மை அலுவலா் ஐஸ்வா்யா மண் மாதிரிகளை ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், எங்கெங்கு மண் மாதிரிகளைச் சேகரிக்கலாம் என்பது குறித்தும் விளக்கினாா்.

உதவி வேளாண்மை அலுவலா் விஜயலட்சுமி (வேளாண் வணிகம்) நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்த நெல் தானியங்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப அலுவலா் சுபாஷ் சந்திர போஸ் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com