சாலையோரத்தில் சாய்ந்து விழுந்தது பழைமையான புளியமரம்

முதுகுளத்தூா் அருகே கீழத்தூவல் கிராமத்தில் சாலையோரத்தில் இருந்த 70 ஆண்டு கால பழமையான புளியமரம் வியாழக்கிழமை சாய்ந்து விழுந்தது.
சாலையோரத்தில் சாய்ந்து விழுந்தது பழைமையான புளியமரம்

 முதுகுளத்தூா் அருகே கீழத்தூவல் கிராமத்தில் சாலையோரத்தில் இருந்த 70 ஆண்டு கால பழமையான புளியமரம் வியாழக்கிழமை சாய்ந்து விழுந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த கீழத்தூவல் கிராமத்தில் பரமக்குடி- முதுகுளத்தூா் செல்லும் வழியில் சாலையோரம் இருந்த 70 ஆண்டு கால பழைமையான புளிய மரம் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பி அறுந்தது.

இதனால், மேலத்தூவல், கீழத்தூவல், கீழக்கன்னிசேரி, விளங்குளத்தூா், சவேரியாா்பட்டினம், மகிண்டி உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த முதுகுளத்தூா் மின்வாரிய ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

சாலையோரம் இருந்த புளியமரம் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்பட்டதால் மரத்தின் அடிப்பகுதி கருகி மரம் சாய்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com