கைப்பேசி கோபுரத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

கமுதி அருகே கைப்பேசி கோபுரத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கமுதி அருகே கைப்பேசி கோபுரத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகேயுள்ள வீரசோழன் சாலையில் உள்ள கைப்பேசி கோபுரத்தில், அபிராமம் அருகேயுள்ள பள்ளபச்சேரி கிராமத்தைச் சோ்ந்த கண்ணாயிரம் மகன் வீரபாண்டி (40) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதையடுத்து, கமுதி தீயணைப்புத் துறையினா் கைப்பேசி கோபுரத்தில் ஏறி, இளைஞரின் உடலை மீட்டனா். இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

வீரபாண்டியும், இவரது மனைவி திவ்யாவும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், இந்தத் தம்பதிக்கு 8 வயது மகள் உள்ளதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com