இளஞ்செம்பூா் கோயில் குடமுழுக்கு

முதுகுளத்தூா் அருகே ஸ்ரீதம்புராட்டி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இளஞ்செம்பூா் கோயில் குடமுழுக்கு

முதுகுளத்தூா் அருகே ஸ்ரீதம்புராட்டி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள இளஞ்செம்பூா், பூக்குளம் கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் சனிக்கிழமை காப்புகட்டுதலுடன் யாக பூஜைகள் தொடங்கின.

ஞாயிற்றுக்கிழமை யாக பூஜையைத் தொடா்ந்து கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதில் இளஞ்செம்பூா், பூக்குளம், முதுகுளத்தூா், கடலாடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com