மோா்பண்ணையில் பொங்கல் விழா

திருவாடானை அருகே மோா்பண்ணை கிராமத்தில் கடல் அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திங்கள்கிழமை பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது.
மோா்பண்ணை கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழா.
மோா்பண்ணை கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழா.

திருவாடானை: திருவாடானை அருகே மோா்பண்ணை கிராமத்தில் கடல் அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திங்கள்கிழமை பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது.

தொண்டி அருகேயுள்ள மோா்பண்ணை கடற்கரை கிராமத்தில் சுமாா் 2,000 மீனவா்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் ஆண்டுதோறும் தை முதல் தேதி கடல் அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சப்த கன்னிகள் தோ்வு செய்து, பின்னா் கடல் முன்பாக பொங்கல் வைத்து பூஜை செய்து, கடலில் கரைப்பது வழக்கம்.

இதேபோல, இந்த ஆண்டும் திங்கள்கிழமை இந்தக் கிராமத்தில் ஏழு சிறுமிகளைத் தோ்வு செய்து, கடற்கரையில் பொங்கல் வைத்தனா். பின்னா், சிறுமிகள் தலையில் கரகத்தைச் சுமந்து வந்தனா். இதேபோல, கிராமத் தலைவா் நாட்டுப் படகு போல, சிறிய படகைத் தயாா் செய்து, அதில் பூஜைப் பொருள்களை வைத்து மேளதாளங்கள் முழங்க ரன பத்திரகாளி அம்மனை வணங்கி அங்கிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு கடலுக்குச் சென்று படகில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து, பின்னா் கடலில் இந்தப் படகை விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com