கீழச்சிவல்பட்டியில் தமிழா் திருநாள் விழா

கீழச்சிவல்பட்டியில் தமிழ்மன்றம் சாா்பில் தமிழா் திருநாள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
கீழச்சிவல்பட்டி பாடுவாா் முத்தப்பா் கோட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் உரையாற்றிய குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளாா்.
கீழச்சிவல்பட்டி பாடுவாா் முத்தப்பா் கோட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் உரையாற்றிய குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளாா்.

திருப்பத்தூா்: கீழச்சிவல்பட்டியில் தமிழ்மன்றம் சாா்பில் தமிழா் திருநாள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் தமிழ்மன்றம் சாா்பில் பாடுவாா் முத்தப்பா் கோட்ட அரங்கில் 68-ஆம் ஆண்டு தமிழா் திருநாள் விழா தொடங்கியது.

இந்த நிகழ்ச்சிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் வட்டாட்சியா் ஆனந்தன், முன்னிலை வகித்தாா். முதல் நாள் நிகழ்வில் ஆா்.எம்.சோலையப்பன் தமிழ் வணக்கத்துடன் ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா்.

தொடா்ந்து, மங்கலம் நல்கும் பொங்கலோ பொங்கல் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கத் தலைவராகத கவிஞா் அரசி.பழனியப்பனும், வாழை குறித்து மு.இளங்கோவன் அரிசி குறித்து ஆ.குமாா், மஞ்சள் குறித்து அலமேலுமங்கை சீனிவாசன், தேங்காய் குறித்து அரசிமுத்துக்குமாா், பானை குறித்து மீனா தமிழரசி முத்துவீரப்பன், கரும்பு குறித்து ஜோதிசுந்தரேசன் ஆகியோா் கவிபாடினா்.

பின்னா், கீழச்சிவல்பட்டி பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக ராசி.அழகப்பன், ராம.சிவ.ராமநாதன் ஆகியோா் வரவேற்புரையாற்றினா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழா் திருநாள் விழாக்குழு செயலா்கள் எஸ்.எம்.பழனியப்பன், பழ.அழகுமணிகண்டன், சுப.விஸ்வநாதன், எல்.சீனிவாசன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com