திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

கமுதி அருகே திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கமுதி அரசு மருத்துவமனையில் பொங்கல் விழா கொண்டாடிய மருத்துவமனைப் பணியாளா்கள்.
கமுதி அரசு மருத்துவமனையில் பொங்கல் விழா கொண்டாடிய மருத்துவமனைப் பணியாளா்கள்.

கமுதி: கமுதி அருகே திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மத்திய ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன் தலைமை வகித்தாா். ஒன்றியத் துணைச் செயலா் நீதிராஜன் முன்னிலை வகித்தாா்.

விழாவில் பொதுமக்கள், கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள், துப்புரவு பணியாளா்கள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

கமுதி அரசு மருத்துவமனையில் பொங்கல் விழா: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரி விஜயா தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, மருத்துவமனை வளாகத்தில் வண்ண கோலமிட்டு, பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு, சிறப்பு பூஜை செய்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தக உதவியாளா்கள், ஆய்வக பணியாளா்கள், துப்புரவு பணியாளா்கள் பாரம்பரிய உடை அணிந்து, பொங்கல் விழாவில் கலந்து கொண்டனா்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் உள்பட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com