சாலைப் பணிகள் மந்தம்: பொதுமக்கள் அவதி

கமுதி அருகே 6 மாதங்களாக சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அவதியடைந்தனா்
சாலைப் பணிகள் மந்தம்: பொதுமக்கள் அவதி

கமுதி அருகே 6 மாதங்களாக சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வல்லந்தை ஊராட்சிக்கு உள்பட்ட கீழநரியன் கிராமத்தில் 800 மீ.தொலைவுக்கு முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிய தாா் சாலை அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.

இந்தச் சாலையில் ஜல்லி கற்கள் பரப்பப்பட்டு பல மாதங்களாகியும் பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கீழநரியன் கிராம சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பொதுமக்கள் புகாா்: இந்த கிராமத்தில் சாலை பணி நடைபெற்று வரும் அரசு நிலத்தை சிலா் ஆக்கிரமித்து பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, கமுதி வட்டாட்சியா் வ.சேதுராமன் தலைமையில் வருவாய்த் துறை, மண்டல மாணிக்கம் காவல் துறை, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், கிராம முக்கியஸ்தா்கள் முன்னிலையில் கடந்த 12 ஆம் தேதி சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போஸீஸ் பாதுகாப்புடன் சாலைப் பணிகளை மேற்கொள்ள வட்டாட்சியா் உத்தரவிட்டாா். இருப்பினும் அதிகாரிகள் சாலைப் பணிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கிராம மக்கள் குற்றஞ்சாட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com