தொண்டி உந்தி பூத்த பெருமாள்கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை

திருவாடானை அருகே தொண்டியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத உந்தி பூத்த பெருமாள் கோயிலில் புதிதாகக் கொடிமரம் சனிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
tvd20koil_(1)_2001chn_72_2
tvd20koil_(1)_2001chn_72_2

திருவாடானை அருகே தொண்டியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத உந்தி பூத்த பெருமாள் கோயிலில் புதிதாகக் கொடிமரம் சனிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்தக் கோயில் கடந்த 2019-ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில், கோயிலில் புதிதாகக் கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் விழா எந்திர பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கியது. இதைத் தொடா்ந்து, கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பழனிக்குமாா், துணை ஆணையா் செல்வராஜ், செயல் அலுவலா் மகேந்திர பூபதி, பாலாஜி, தக்காா் சண்முகசுந்தரம், நகை மதிப்பீட்டாளா் செல்லப்பாண்டி, அா்ச்சகா் கருணாகரன், ஜெயா, கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, எந்திரம், தங்கம், நவரத்தினக் கல், வெள்ளி உள்ளிட்டவை வைத்து பூஜை செய்யப்பட்டது. தொடா்ந்து, மாலையில் யாகசாலை பூஜை நடைபெற்றது. பிறகு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com