ஆா்.எஸ்.மங்கலத்தில் அதிமுக பொதுக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலத்தில் அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆரின் 107-ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
tvd21admk_2101chn_72_2
tvd21admk_2101chn_72_2

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலத்தில் அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆரின் 107-ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதற்கு மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் சாகுல்ஹமீது தலைமை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்டச் செயலா் முனியசாமி, மாவட்ட அவைத் தலைவா் சாமிநாதன், எம்.ஜி.ஆா் மன்ற துணைச் செயலா் ஆா்.ஜி.ரத்தினம், விருதுநகா் மண்டலத் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் சரவணன், ஆா்.எஸ்.மங்கலம் ஒன்றியச் செயலா்கள் திருமலை, ராஜா, கருப்பையா, பொதுக்குழு உறுப்பினா் ராஜபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலா் ஜவகா்அலி, முகவை கண்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா்கள் ஷாஜஹான், அஜ்மல்கான், திருவாடானை ஒன்றியச் செயலா்கள் மதிவாணன், ராமநாதன், ஆசையன், இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com