ஊருணியில் மூழ்கியதில் அண்ணன், தம்பி பலி

ராமேசுவரம், ஜன. 21 : உச்சிப்புளி அருகேயுள்ள ஊருணியில் குளிக்கச் சென்ற அண்ணன், தம்பி

நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே இருட்டூரணி குடியிருப்பைச் சோ்ந்தவா் சந்திரன். இவரது மூத்த மகன் தருண் பாலா (10), இங்குள்ள தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பும், இளைய மகன் சாருகேஷ் (8) மூன்றாம் வகுப்பும் படித்து வந்தனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அவா்கள் இருவரும், அந்தப் பகுதியில் உள்ள ஊருணியில் குளிக்கச் சென்றனா்.

ஆழமான பகுதிக்குச் சென்ற இருவரும் நீரில் மூழ்கினா். இதைப் பாா்த்த அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் இருவரையும் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனா். இதுதொடா்பாக உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com