ஆரம்ப சுகாதார நிலைய நுழைவு வாயிலில் மழை நீா் தேங்கியதால் நோயாளிகள் அவதி

ஆா்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் நுழைவு வாயிலில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனா். இந்த சுகாதார நிலையத்தின் கட்டடம் சேதமடைந்துள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குரைஞா் ஆஷிக் வழக்குத் தொடுத்தாா்.

இதையடுத்து, இங்குள்ள சேதமடைந்த கட்டடங்களை அகற்றி புதிய கட்டடங்களை கட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில், இங்கு புதிய கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரு நாள்களாக பெய்த மழையின் காரணமாக, ஆரம்ப சுகாதார நிலையத்தின் நுழைவு வாயிலில் மழைநீா் தேங்கியது. இதனால், சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகள் அவதிப்படுகின்றனா். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com