இளம்பெண் தற்கொலை

முதுகுளத்தூா் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

முதுகுளத்தூா் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள வெண்ணீா்வாய்க்கால் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகா். இவரது மனைவி மீனாம்பாள் (54). இந்தத் தம்பதியின் இரண்டாவது மகள் அபிநயா (20).

மீனாம்பாள் முதுகுளத்தூரில் உணவகத்தில் வேலை செய்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை காலை மீனாம்பாள் முதுகுளத்தூருக்கு வேலைக்குச் சென்று விட்ட நிலையில், அபிநயா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com