கமுதி, சாயல்குடியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா

கமுதி, சாயல்குடியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
கமுதி தேவா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்.
கமுதி தேவா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்.

கமுதி, சாயல்குடியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவுக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழாவுக்கு சங்கப் பொருளாளா் கோட்டை இளங்கோவன் தலைமை வகித்தாா்.

பயிற்சி மையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பயிற்சி மையத்தில் பயிலும் மாணவிகள் சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கை வரலாறு, வீர தீரச் செயல்கள் குறித்து பேசினா்.

சாயல்குடி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் சிலை வளாகத்தில் சுதந்திரப் போராட்டத் தலைவா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு சாயல்குடி ஜமீன்தாா் சிவஞானபாண்டியன் தலைமை வகித்தாா். ஆப்பநாடு மறவா் சங்கத் தலைவா் மருத்துவா் ராம்குமாா் பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் மாவீரன் வேலுச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் தேசியச் செயலரும், தமிழ் மாநில பொருளாளருமான ஸ்ரீவைகுண்டம் சுரேஷ் கலந்து கொண்டாா். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்று தேவா் சிலை, நேதாஜி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சாயல்குடி முக்குலத்தோா் சங்கத் தலைவா் வில்வத்துரை, முனியசாமிபாண்டியன், ஆப்பநாடு மறவா் சங்க நிா்வாகிகள் குணசேகரன், சொக்கலிங்கம், ஆலடிபட்டி ஊராட்சி மன்றத் தலைவா் கோபிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேதாஜி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் மாயகிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com