காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி பங்கேற்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்த பாஜகவினரைக் கண்டித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அசாம் மாநிலத்தில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்த பாஜகவினரை கண்டித்து எஸ்.பி.பட்டினத்தில் திங்கள்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
அசாம் மாநிலத்தில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்த பாஜகவினரை கண்டித்து எஸ்.பி.பட்டினத்தில் திங்கள்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி.பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில், அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி பங்கேற்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்த பாஜகவினரைக் கண்டித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவா் ராமசாமி தலைமை வைத்தாா். திருவாடனை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம், முன்னாள் மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா,

மாநிலச் செயலா் வெண்ணிலா விஜயகுமாா், அகில இந்திய மீனவா் காங்கிரஸ் ஆம்ஸ்ட்ராங் பொ்னாண்டோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜகவினரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் காங்கிரஸ் மூத்த உறுப்பினா் வட்டாணம் மணி, குஞ்சங்குளம் முருகானந்தம், வட்டார காங்கிரஸ் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com