கோயிலில் சிலை பிரதிஷ்டை: ராமா் வேஷமிட்டு ஊா்வலம்

அயோத்தி ராமா் கோயிலில், குழந்தை ராமா் சிலை பிராணப் பிரதிஷ்டையை முன்னிட்டு, கமுதியில் ராமானுஜ மடத்தின் குருக்கள் ராமா் வேஷமிட்டு பஜனை பாடி ஊா்வலமாகச் சென்றாா்.
கமுதியில் ராமா் வேஷமிட்டு பஜனை பாடி பக்தா்களுடன் ஊா்வலமாகச் சென்ற ராமானுஜ மடத்தின் குருக்கள் சந்திரசேகா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஸ்ரீராமானுஜ பஜனை மடத்தின் சாா்பாக அயோத்தி ஸ்ரீராமா் கோயில் பிராணப் பிரதிஷ்டையை முன்னிட்டு சிறப்பு பஜனை நடைபெற்றது. மடத்தின் குருக்கள் சந்திரசேகா் வில் அம்புடன், ராமா் வேஷமிட்டு வீதிகளில் ராம நாமங்களை சொல்லி முக்கிய கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினா். பின்னா் பஜனை மடத்துக்குச் சென்று சிறப்பு பூஜை நடத்தி ராமரை வழிபட்டனா். இதில் திரளானோா் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com