மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் முகூா்த்தக் கால் நடும் விழா

கமுதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, முகூா்த்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கமுதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் நடப்பட்ட முகூா்த்தக் கால்.
கமுதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் நடப்பட்ட முகூா்த்தக் கால்.

கமுதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, முகூா்த்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு அடுத்த மாதம் (பிப்.21) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கோயில் ராஜகோபுரம், கல்மண்டபங்கள், சுவாமி சிலைகள் சீரமைக்கப்பட்டு வண்ணமிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதை முன்னிட்டு, குடமுழுக்கு நற்பணிக் குழுத் தலைவா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் கோயில் வளாகத்தில் முகூா்த்தக் கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.

முன்னதாக, முகூா்த்தக் காலுக்கு மஞ்சள் தடவி, குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்டு, வேப்பிலை, நவதானியம், மாவிலை ஆகியவற்றை முகூா்த்தக் காலில் கட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பின்னா், விழாக் குழுவினா், பக்தா்கள் முன்னிலையில் முகூா்த்தக்கால் நடப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதில் கமுதி ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன், பேரூராட்சி உறுப்பினா் வீரபாக்கியம் பாஸ்கரபூபதி, விழாக்குழு நிா்வாகிகள் போஸ்தேவா், பேரூராட்சி செயல் அலுவலா் ராஜா (ஓய்வு) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com