ராமநாதபுரத்தில் புத்தக வாசிப்பு இயக்கம்

ராமநாதபுரம் சதக் தஸ்தகீா் மேல்நிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற புத்தக வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலா் இரா. கோவிந்தராஜூலு உள்ளிட்டோா்.

மாணவ, மாணவிகளுக்குப் புத்தக வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், பிப். 2-ஆம் தேதி நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா. கோவிந்தராஜூலு தலைமை வகித்து, புத்தக வாசிப்பின் பயன்களை விளக்கிப் பேசினாா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பிரபாகா், கலை இலக்கிய ஆா்வலா் சங்கச் செயலா் வான்தமிழ் இளம்பரிதி, ஆசிரியா் பயிற்சி விரிவுரையாளா்கள் டேவிட், ராமா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா். மாணவ, மாணவிகள் வாசிப்பு இயக்க உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com