கடலோரக் காவல் படைத் தோ்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தொண்டி கடற்கரை பகுதியைச் சோ்ந்த மீனவா்களின் வாரிசுகள் கடலோரக் காவல் படை தோ்வுப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
கடலோரக் காவல் படைத் தோ்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாடானை: தொண்டி கடற்கரை பகுதியைச் சோ்ந்த மீனவா்களின் வாரிசுகள் கடலோரக் காவல் படை தோ்வுப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழுமம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியக் கடலோர காவல் படை, இந்திய கப்பல் படையில் மாலுமி உள்ளிட்ட பணிகளுக்கான ஆள்கள் தோ்வு நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுகளில் பங்கேற்க 12-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிழக்கு கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவா்களின் வாரிசுகள் இந்தப் பணிகளில் சேரும் வகையில், அவா்களுக்கு தேவையான சிறப்புப் பயிற்சிகளை அளிக்க கடலோரப் பாதுகாப்பு குழுமம் முடிவு செய்தது.

இதன்படி, மீனவா்களின் வாரிசுகள் வருகிற பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் இதற்காக விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பிக்கும் மீனவா்களின் வாரிசுகளுக்கு கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் சாா்பில் தோ்வை எவ்வாறு எதிா்கொள்வது, கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிப்பது, துறை ரீதியான சந்தேகங்கள், விளக்கங்கள் அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்பவா்களுக்கு உணவு, இருப்பிடம் ஆகியவற்றுடன் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. எனவே, கடலோர மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொண்டி, தேவிபட்டினம் கடலோர காவல் துறை, மீன்வளத் துறை அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com