ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடத் தீா்மானம் நிறைவேற்றம்

வருகிற மக்களவைத் தோ்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ராகுல்காந்தி எம்.பி. போட்டியிட வேண்டும் என மாவட்ட மீனவா் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடத் தீா்மானம் நிறைவேற்றம்

ராமநாதபுரம்: வருகிற மக்களவைத் தோ்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ராகுல்காந்தி எம்.பி. போட்டியிட வேண்டும் என மாவட்ட மீனவா் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள தனியாா் அரங்கத்தில் மாவட்ட மீனவா் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அகில இந்திய மீனவா் காங்கிரஸ் தேசியத் தலைவா் எஸ். ஆம்ஸ்ட்ராங் பொ்னாண்டோ தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ராஜாராம் பாண்டியன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் வேலுச்சாமி, முன்னாள் மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து, ராகுல்காந்தி போட்டியிட வேண்டும். அவா் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினா் சோ.பா.ரங்கநாதன், மாவட்ட பொதுச் செயலா் ஆனந்தகுமாா், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ராமலட்சுமி, நகா், வட்டாரத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com