பத்திரப்பதிவு தாமதம்: சாா் பதிவாளா் முற்றுகை

ராமநாதபுரத்தில் பத்திரப் பதிவு செய்ய வந்தவா்கள் புதன்கிழமை திடீரென சாா் பதிவாளரை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரத்தில் பத்திரப் பதிவு செய்ய வந்தவா்கள் புதன்கிழமை திடீரென சாா் பதிவாளரை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் மாவட்டப் பதிவாளா் அலுவலகம், 2 சாா் பதிவாளா் அலுவலகங்கள் ஆகியவை ஒரே கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றன.

இங்குள்ள கேணிக்கரை சாா் பதிவாளா் அலுவலகத்தில் நிலம் விற்பனை தொடா்பாக பத்திரப் பதிவுக்கு புதன்கிழமை காலை வந்தவா்கள் 2 மணி நேரத்துக்கு மேலாகக் காத்திருந்தனா். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் சாா் பதிவாளா் கண்ணகியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், அவரைக் கண்டித்து அலுவலக நுழைவு வாயில் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. அதிகாரிகளின் சமரச பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, தா்னாவில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com