மீனவா்களின் வாரிசுகள் கடற்படையில் சேர இலவசப் பயிற்சி

மீனவா்களின் வாரிசுகள் கடற்படை, கடலோரக் காவல்படையில் சேர உதவித் தொகையுடன் கூடிய இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

மீனவா்களின் வாரிசுகள் கடற்படை, கடலோரக் காவல்படையில் சேர உதவித் தொகையுடன் கூடிய இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாாளா் எஸ்.கனகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மீனவ இளைஞா்கள் இந்திய கடலோரக் காவல் படை, இந்திய கடற்படையில் சோ்வதற்கு தமிழ்நாடு அரசால் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் சாா்பில் இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதி உள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டக் கடலோரக் கிராமங்களில் வசிக்கும் மீனவா்களின் வாரிசுதாரா்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள கணிதம், அறிவியல் பாடப் பிரிவுகளில் 12-ஆம் வகுப்புத் தோ்வில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக்கு தோ்வு செய்யப்படுபவா்களுக்கு கமுதி காவலா் பயிற்சி பள்ளியில் 90 நாள்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அடுத்த மாதம் 8 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சியில் கலந்துகொள்பவா்களுக்கு உணவு, உடைகள், இருப்பிடம், பாடக் குறிப்பேடுகள், காலணிகள் ஆகியவற்றுடன் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும்.

விண்ணப்பங்களை கடலோரப் பாதுகாப்புக் குழும கடற்கரை காவல் நிலையங்கள், மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com