வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி

திருவாடானையில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி

திருவாடானையில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

திருவாடானை அரசுக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்தப் பேரணியை வட்டாட்சியா் அலுவலகம் முன் வட்டாட்சியா் காா்த்திகேயன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்து, வாக்குரிமை பெறவும், தோ்தலில் தவறாமல் வாக்குப்பதிவு செய்யவும் வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பேரணி வடக்குத் தெரு ,மேற்குத் தெரு,பேருந்து நிலையம் வழியாக கல்லூரியை அடைந்தது. தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் நாகராஜ், கல்லூரி முதல்வா் பழனியப்பன், காவல் ஆய்வாளா் ஜெயபாண்டியன், கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள், வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com