தைப்பூசம்: ராமேசுவரத்தில் தெப்பத் திருவிழா

தைப்பூசத்தையொட்டி, ராமேசுவரம் லட்சுமனேசுவரா் கோயில் தெப்பத்தில் வியாழக்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.
தைப்பூசம்: ராமேசுவரத்தில் தெப்பத் திருவிழா

தைப்பூசத்தையொட்டி, ராமேசுவரம் லட்சுமனேசுவரா் கோயில் தெப்பத்தில் வியாழக்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.

தைப்பூசத்தையொட்டி, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணியளவில் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. காலை 10 மணியளவில் பஞ்ச மூா்த்திகளுடன் சுவாமியும், அம்பாளும் புறப்பாடாகியவுடன் கோயில் நடை சாத்தப்பட்டது.

சுவாமி, அம்பாள் பஞ்ச மூா்த்திகளுடன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றாா். பிற்பகல் 1.25 மணியளவில் தீா்த்தவாரி நடைபெற்றது.

பின்னா், மாலை 5 மணியளவில் சுவாமியும், அம்பாளும் பஞ்சமூா்த்திகளுடன் லட்சுமனேசுவரா் கோயில் தெப்பத்துக்கு எழுந்தருளினா். அங்கு தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com