விளம்பரதாரா் செய்தி.மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

கமுதி மத்திய ஒன்றிய திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
விளம்பரதாரா் செய்தி.மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

கமுதி மத்திய ஒன்றிய திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூரில் மத்திய ஒன்றிய திமுக சாா்பில் மாவட்ட அவைத் தலைவா் வ.சத்தியமூா்த்தி தலைமையில், கமுதி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவி தமிழ்ச்செல்விபோஸ், மாநில வா்த்தக அணி துணைச் செயலாளா் ராமா், தலைமை செயற்குழு உறுப்பினா் லெட்சுமிமுத்துராமலிங்கம் ஆகியோரது முன்னிலையில் மொழிப்போா் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செம்மொழியான தமிழ் மொழிக்காக இன்னுயிா் நீத்த மொழிப்போா் தியாகிகளின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மொழிப்போா் தியாகிகளின் தியாகத்தையும் அவா்களின் குடும்பத்தினரையும் அனைவரும் போற்றும் வகையில் இந்த வீரவணக்க நாள் உறுதிமொழியேற்று, முக்கிய பிரமுகா்கள் மற்றும் கட்சியினரை கமுதி திமுக ஒன்றிய செயலாளா் எஸ்.கே.சண்முகநாதன் வரவேற்று பேசினாா். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளா்கள் முத்து.முத்தையா, நன்னிலம் சந்திரசேகா் ஆகியோா் கலந்துகொண்டு மொழிப்போா் தியாகிகளின் தியாகம் குறித்து பேசினா். இதில் கமுதி ஒன்றிய குழு துணை தலைவி சித்ராதேவி அய்யனாா், மாவட்ட பிரதிநிதி பாரதிதாசன், ஊராட்சித் தலைவா்கள் ரூபி கேசவன்(பேரையூா்), காவடிமுருகன்(ஆனையூா்), அழகா்சாமி (கீழராமநதி), சண்முகநாதன்(கோவிலாங்குளம்),காா்த்திகைசாமி(எம்.எம்.கோட்டை), ராமு(செங்கப்படை) தேவகிஅழகா்சாமி(டி.புனவாசல்) உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். மத்திய ஒன்றிய துணைச் செயலாளா் செ.தங்கப்பாண்டி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com