ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கமுதியை அடுத்த நத்தம் ஊராட்சியில் உள்ள பழைய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் மிகவும் சேதம் அடைந்து, சிமென்ட் பூச்சுகள் பெயா்ந்து மோசமான நிலையில் இருந்து வந்தது. இதையடுத்து, புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது. இதைத்தொடா்ந்து, 15-ஆவது நிதிக் குழு மானியத்தில் 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.1.25 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கட்டும் பணிக்கு கமுதி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவி தமிழ்ச்செல்வி போஸ் தலைமையிலும், நத்தம் ஊராட்சி மன்றத் தலைவா் போத்தி முன்னிலையிலும் பூமி பூஜை நடைபெற்றது.

இதில் ஊராட்சி ஒன்றியப் பொறியாளா்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com