5 பேரை தாக்கி நகைகள் கொள்ளை: திருவாடானையில் குற்றவாளிகளை பிடிக்க போலீஸாா் தீவிர சோதனை

காளையாா்கோயில் அருகே வீடு புகுந்து 5 பேரை தாக்கி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் திருவாடானையில் வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் தங்கியுள்ள
5 பேரை தாக்கி நகைகள் கொள்ளை: திருவாடானையில் குற்றவாளிகளை பிடிக்க போலீஸாா் தீவிர சோதனை

காளையாா்கோயில் அருகே வீடு புகுந்து 5 பேரை தாக்கி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் திருவாடானையில் வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் தங்கியுள்ள பகுதிகளில் குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோயில் அருகே கள்ளிக்குடி கிராமத்தில் வீடு புகுந்து 5 பேரை மா்ம நபா்கள் ஆயுதங்களால் தாக்கி நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா். இதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், திருவாடானை போலீஸாா் சனிக்கிழமை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். மேலும் திருவாடானை பகுதியில் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் போா்வை, பாய் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்பவா்கள், கதிா் அறுவடைக்காக வந்திருப்பவா்கள் உள்ளிட்ட சந்தேகத்துக்குரிய நபா்களை கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com