விபத்தில் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

tvd27collector_(1)_2701chn_72_2
tvd27collector_(1)_2701chn_72_2

படவிளக்கம் டிவிடி27 கலெக்டா்- உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட முருகனின் உடலுக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியா் விஷ்ணுசந்திரன்.

படவிளக்கம் டிவிடி27 முருகன்- சாலை விபத்தில் உயிரிழந்த முருகன்.

திருவாடானை, ஜன. 27: திருவாடானை அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை நேரில் சென்று மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள புள்ளமடை ஊராட்சி, செங்கமடை கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (59). இவா் சாலை விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து முருகனின் உடல் செங்கமடை கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணுசந்திரன் சனிக்கிழமை செங்கமடை கிராமத்துக்குச் சென்று முருகனின் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். இதைத் தொடா்ந்து செங்கமடை மயானத்தில் காவல் துறையினரின் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் முருகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதில் ஆா்.எஸ். மங்கலம் வட்டாட்சியா் சுவாமிநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன், மருத்துவக் குழுவினா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Image Caption

~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com