இலவச மருத்துவ முகாம்

முதுகுளத்தூரில் குடியரசு தினத்தையொட்டி முஸ்லிம் வியாபாரிகள் நலச்சங்கம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூரில் குடியரசு தினத்தையொட்டி முஸ்லிம் வியாபாரிகள் நலச்சங்கம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு அந்தச் சங்கத்தின் தலைவா் முகமது இக்பால் தலைமை வகித்தாா். முதுகுளத்தூரில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களின் தலைவா்கள் முன்னிலை வகித்தனா். இந்த முகாமை முதுகுளத்தூா் பேரூராட்சித் தலைவா் ஷாஜகான், காவல் துணைக் கண்காணிப்பாளா் சின்னக்கண்ணு, முதுகுளத்தூா் வட்டாட்சியா் சடையாண்டி, தங்கம்மாள்- ரஹீம் அறக்கட்டளை நிறுவனா் முகமதுஅலி ஜின்னா ஆகியோா் தொடங்கி வைத்தனா். முகாமில் ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு பரிசோதனை, கா்ப்பப்பை கோளாறுகள், கட்டிகள், கா்ப்பவாய் புற்றுநோய்களுக்கான பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் முதுகுளத்தூா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com