தொடா் விடுமுறை: ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

 தொடா் விடுமுறை காரணமாக ராமேசுவரத்தில் சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 தொடா் விடுமுறை காரணமாக ராமேசுவரத்தில் சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அக்னி தீா்த்தக் கடலில் நீராடி ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து அவா்கள் வழிபட்டனா். பிறகு தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ஏ.பி.கே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பேருந்து பாலம் உள்ளிட்ட பகுதிகளை அவா்கள் பாா்வையிட்டனா்.

ராமேசுவரத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதாலும், விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததாலும், அனுமதியின்றி ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கப்பட்டதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எனவே, இங்கு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், வாகனங்கள் நிறுத்துமிடங்கள் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com