தாம்பூலத் தட்டில் 40 நிமிஷம் நடனமாடி 161 மாணவிகள் உலக சாதனை

ராமநாதபுரத்தில் நோபல் உலகச் சாதனைக்காக ஞாயிற்றுகிழமை நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 161 மாணவிகள் தாம்பூலத் தட்டில் 40 நிமிஷம் நடனமாடி சாதனை படைத்தனா்.

இந்த நிகழ்ச்சிக்கு, வேலு மாணிக்கம் கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி தாளாளா் வி.மனோகரன் தலைமை வகித்தாா். செயலா் சகுந்தலா பாா்த்த சாரதி முன்னிலை வகித்தாா்.

இதில், 5 வயது முதல் 19 வயது வரையிலான 161 மாணவிகள் கலந்துகொண்டு தாம்பூல தட்டில் தொடா்ந்து 40 நிமிஷம் நடனமாடினா். முன்னதாக, கல்லூரி முதல்வா் காஞ்சனா வரவேற்றாா். இதை அங்கிகரித்து நோபல் உலக சாதனை பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com