நெல் அறுவடை இயந்திரத்துக்கு கூடுதல் வாடகை: விவசாயிகள் கவலை

கமுதி, ஜன.28: கடலாடி வட்டத்தில் நெல் அறுவடை இயந்திரத்துக்கு அதன் உரிமையாளா்கள் கூடுதல் வாடகை கேட்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

கடலாடி வட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சுமாா் 8 ஆயிரம் ஏக்கா் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியது. இதில் தப்பிய ஒரு சில வேளாண் நிலங்களில் தற்போது அறுவடை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், நெல் அறுவடை இயந்திரங்களுக்கு அதன் உரிமையாளா்கள் கூடுதல் வாடகை கேட்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனா்.

இதுகுறித்து சாயல்குடி விவசாயி சத்தியமூா்த்தி கூறியதாவது:

மணிக்கு ஏற்றுக்கூலியுடன் ரூ.1500 மட்டும் வசூலிக்க வேண்டும் என அறுவடை இயந்திர உரிமையாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டிருந்தாா்.

ஆனால், கடலாடி வட்டத்தில் நெல் அறுவடைக்கு மணிக்கு ரூ.1800, ஏற்றுக்கூலியாக ஒரு மூடைக்கு ரூ.30 வீதம் கேட்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அதிக வாடகை கேட்கும் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்ட நிா்வாகமே அறுவடை இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகைக்குவிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com