பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

28tprbrd_2801chn_85_2
28tprbrd_2801chn_85_2

படவிளக்கம் - (டி.பி.ஆா்.பி.ஆா்.டி.)

சிவகங்கை வனக்கோட்டப் பகுதியான ஏ.மேலையூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சதுப்பு நிலப் பறவைகள் கணக்கெடுப்புப் பணியினை மேற்கொண்ட குழுவினா்.

திருப்பத்தூா், ஜன. 28 : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வனக்கோட்டத்தில் சதுப்பு நிலப் பறவைகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட வனஅலுவலா் பிரபா அறிவுறுத்தலின்படி வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட 25 சதுப்பு நிலங்களில் இந்தக் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது.

முன்னதாக, சனிக்கிழமை திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் பறவைகள் கணக்கெடுப்பின் நோக்கம் குறித்து ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.

இதையடுத்து, கல்லூரி மாணவ, மாணவிகள் வனத் துறையினா் தன்னாா்வலா்கள் உள்பட 25 குழுக்கள் பிரிக்கப்பட்டன.

இந்த குழுவினரிடம் கணக்கெடுப்புக்கான குறிப்பேடு, செயலி, உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதையடுத்து, மாவட்ட வனக்கோட்டத்துக்குள்பட்ட 25 கண்மாய்களில் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி மாணவ, மாணவிகள், சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள், வனத் துறைப் பணியாளா்கள், கல்லூரி பேராசிரியா்கள், பறவை ஆா்வலா்கள் இதில் ஈடுபட்டனா். பறவைகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் ஒருசில நாள்களில் அறிவிக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com