கீழக்கரையில் இலவச கண் மருத்துவ முகாம்

ராமேசுவரம், ஜன. 28: கீழக்கரையில் சுழல் சங்கமும், சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு அதன் தலைவா் கபீா் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் ராசிக்தீன் முன்னிலை வகித்தாா். இதில், செயலா் எபன் பிரவீன்குமாா், முன்னாள் செயலா் காா்த்திக், சுமு பில்டா்ஸ் கண்ணன், சூழல் சங்க உறுப்பினா்கள், கிராம முக்கியப் பிரமுகா்கள் வாஹித், சாதிக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இந்த முகாமில் 50- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com