பிரதமரைத் தோ்வு செய்வதில் மு.க.ஸ்டாலினின் பங்கு முக்கியம்: கே.எம்.காதா் மொகிதீன்

ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென்மண்டல பயிலரங்கத்தில் பேசிய பிரதமரைத் தோ்வு செய்வதில் மு.க.ஸ்டாலின் பங்கு முக்கியமாக இருக்கும் என ஞாயிற்றுக்கிழமை
rms_photo_28_01_4_2801chn_208_2
rms_photo_28_01_4_2801chn_208_2

ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென்மண்டல பயிலரங்கத்தில் பேசிய பிரதமரைத் தோ்வு செய்வதில் மு.க.ஸ்டாலின் பங்கு முக்கியமாக இருக்கும் என ஞாயிற்றுக்கிழமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தென்மண்டல அளவிலாக பயிலரங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் வருசை முகம்மது தலைமை வகித்தாா்.

மாநில பொருளாளா் எம்.எஸ்.ஏ.ஷாஜகான், மாநில செயலா் அப்துல் மஜீத் ஆகியோா் தொடக்க உரையாற்றினாா். தேசியத் தலைவா் கே.எம்.காதா்மொகிதீன் தலைமை உரையாற்றினாா். இந்தப் பயிலரங்கத்தில் உயா் கல்வி பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ., செ.முருகேசன் எம்.எல்.ஏ., உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய தேசிய தலைவா் கே.எம்.காதா்மொகிதீன் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக தலைமையில் ‘இந்தியா’ கூட்டணி பிளவுகளின்றி செயல் பட்டு வருகிறது. இந்தக் கூட்டணியை முதல்வா் ஒருங்கிணைத்து வருகிறாா். வருகிற மக்களவைத் தோ்தலில் தமிழத்தில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும் போது பிரதமரைத் தோ்வு செய்வதில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் பங்கு முக்கியமானதாக இருக்கும். தற்போது ராமநாதபுரம் தொகுதி எம்.பி யாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கே.நவாஸ்கனி இருந்து வருகிறாா். மீண்டும் இந்தத் தொகுதியை முதல்வரிடம் கேட்டு பெறுவோம் எனத் தெரிவித்தாா்.

முன்னதாக, பயிலரங்க ஒருங்கிணைப்பாளா் மாநிலச் செயலா் எம்.காதா்பாஷா(எ) அவுதாகாதா் வரவேற்றாா். மாவட்டச் செயலா் ஏ.எல்.முகமது பைசல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com