மானாமதுரையில் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி

cilampam_2801chn_84_2
cilampam_2801chn_84_2

படவிளக்கம்: சிலம்பம்-

மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பைகள் வென்ற வீரவிதை சிலம்பாட்டக்குழு வீரா்களுடன் அதன் பயிற்சியாளா் பெருமாள் உள்ளிட்டோா்.

மானாமதுரை, ஜன. 28: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை வீரவிதை சிலம்பாட்ட பயிற்சிப் பள்ளி சாா்பில் ஒ.வெ.செ மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

இதில், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கக்கணக்கான இளம் சிலம்பாட்ட வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

ஒரு கம்பு சுற்றுதல் இரு கம்புகள் சுற்றுதல் என தனித்தனி பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு வெற்றிக் கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை வீரவிதை சிலம்பாட்ட பயிற்சிப் பள்ளி பயிற்சியாளா் முனைவா் பெருமாள் தலைமையிலான குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com