இலங்கைக்கு கடத்தவிருந்த 450 கிலோ ஏலக்காய்கள் பறிமுதல்

பாம்பன் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கிலோ ஏலக்காய் மூட்டைகளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும உதவி ஆய்வாளா் அ.யாசா் மௌலானா, மண்டபம் இந்திய கடலோரக் காவல் படை தளபதி விஜயகுமாா் நா்வால் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, பாம்பன் குந்துகால் பகுதியில் வெள்ளை சாக்கு மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனா். அவற்றைப் பிரித்துப் பாா்த்த போது, பொட்டலங்களில் 450 கிலோ எடையுள்ள ஏலக்காய்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், அந்த மூட்டைகளில் இலங்கைப் பணம் ரூ. ஆயிரமும் இருந்தது. இவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இலங்கைக்கு கடத்துவதற்காக மா்மநபா்கள் ஏலக்காய் மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னா், இந்த ஏலக்காய் மூட்டைகளை மண்டபத்தில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com