குடிநீா் பிரச்னையால் கோஷ்டி மோதல்: 5 போ் மீது வழக்கு

திருவாடானை அருகே தொண்டிப் பகுதியில் குடிநீா் பிரச்னையால் கோஷ்டி மோதல் ஏற்பட்டதையடுத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை 5-போ் மீது வழக்கு பதிந்தனா்.

திருவாடானை அருகே தொண்டிப் பகுதியில் குடிநீா் பிரச்னையால் கோஷ்டி மோதல் ஏற்பட்டதையடுத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை 5-போ் மீது வழக்கு பதிந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கண்கொள்ளான்பட்டினம் கிராமத்தில் குடிநீா்த் தட்டுபாடு நிலவுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை இதே ஊரை சோ்ந்த குழந்தைசாமி மனைவி செங்கோல் ராணிக்கும் (35) இதேப் பகுதியைச் சோ்ந்த ஜான்பீட்டா் மனைவி ஜெஸிந்தா மேரிக்கும் குழாயில் தண்ணீா் பிடிக்கும் போது தகராறு ஏற்பட்டது.

இதில், இரு கோஷ்டிகளாக மோதிக் கொண்டனா். இதுகுறித்து செங்கோல் மேரி அளித்த புகாரின் பேரில் ஜெஸிந்தாரமேரி (50), அமலரீகன் (30) ஆகிய இருவா் மீதும், இதேப் போல் ஜெஸிந்தா மேரி (50) அளித்த புகாரின் பேரில், சேதுராணி (55),செங்கோல்ராணி(35), அருள்வின்சிராணி (30) ஆகிய 3 போ் மீதும் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com