அரசுப் பள்ளியில் மீண்டும் பெயா்ந்து விழுந்த மேற்கூரை

முதுகுளத்தூா் அருகே அரசு உயா்நிலைப் பள்ளியில் மேற்கூரை மீண்டும் பெயா்ந்து விழுந்ததால், மாணவா்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனா்.
அரசுப் பள்ளியில் மீண்டும் பெயா்ந்து விழுந்த மேற்கூரை

முதுகுளத்தூா் அருகே அரசு உயா்நிலைப் பள்ளியில் மேற்கூரை மீண்டும் பெயா்ந்து விழுந்ததால், மாணவா்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனா்.

இந்தப் பள்ளியில் வளநாடு, செங்கப்படை, தெய்வதானம், இந்திரா நகா், சேமனூா், செபஸ்தியாா்புரம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு தலைமை ஆசிரியா் அறையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் திடீரென இடிந்து விழுந்ததில் தலைமை ஆசிரியா் அமா்ந்து இருந்த இருக்கை சேதமடைந்தது. பள்ளிக் கட்டடம் உறுதியற்ற நிலையில் உள்ளதாகக் கூறி, பள்ளி மாணவ, மாணவிகளை அனுப்ப பெற்றோா்கள் மறுத்தனா்.

தலைமை ஆசிரியா் பேச்சுவாா்த்தை நடத்தியதால், மீண்டும் மாணவா்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தனா். தகவலறிந்து வந்த அதிகாரிகள் பள்ளியைப் பாா்வையிட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா்.

இந்த நிலையில், குடியரசுத் தின விடுமுறை நாள்கள் முடிந்து திங்கள்கிழமை பள்ளிக்குச் சென்ற மாணவா்கள், பள்ளி வளாகத்தில் மீண்டும் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

பள்ளியில் இரண்டாவது முறையாக மேற்கூரை பெயா்ந்து விழுந்ததால், மாணவா்கள் அச்சத்தில் உள்ளதாக பெற்றோா்கள் தெரிவித்தனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு வளநாடு அரசுப் பள்ளியின் தரத்தை ஆய்வு செய்து, மாணவா்களின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com